ஏங்குகிறேன்
ஏங்குகிறேன் நீல வானத்தை காண
வானுயர் கட்டிடங்களை அல்ல
ஏங்குகிறேன் 'சில்'லென்ற மாலை நேர தென்றல் தீண்ட
அடைத்து வைக்கும் குளிர் சாதன பெட்டியை அல்ல
ஹெட் ஃ போனில் ஒலிக்கும் FM அல்ல
ஏங்குகிறேன் தென்னை ஓலைகளுக்கு நடுவில் நிலவை காண
செயற்கைக்கோள் படங்களை அல்ல
அளந்து வளரும் புல் தரைகளில் அல்ல
கை கட்டி , வாய் பொத்தி "நல்ல பிள்ளையாக" வளர அல்ல
மறு வார்த்தை பேசாமல் அடங்கி போவர்கள் அல்ல
ஏங்குகிறேன் சிந்திக்கும் சமுதாயத்திற்காக
சில அரசியல்வாதிகளிடம் மயங்குவதை அல்ல
ஏங்குகிறேன் கூரைகள் செங்கற்களாக மாற.
No comments:
Post a Comment